கள்ளர் பள்ளி கிளை மாவட்ட பொதுக்குழு கூட்டம்


நேற்று (11.02.2014) ஆண்டிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் திரு.ரா.இராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் திரு.அ.பன்னீர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் திரு.பே.தீனன் முன்னிலை வகித்தார்.

கள்ளர் சீரமைப்பில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்(AEEO) பணியிடம் நிரப்பிட அரசாணை எண் 108 நாள் 9.12.2011 வெளியிடப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதையும்,

ஆசிரியர்களின் பணப்பலன், உயர்கல்வி பயிலுதல், ஆறாவது ஊதியக்குழு நிர்ணயம் ஆகியவற்றில் ஏற்படும் காலதாமதத்தையும்,

ஆறு சரகங்களுக்கும் விடுமுறைப்பட்டியல் வழங்காததையும்,

 தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை மூலம் பெறச் செய்வதையும்,

ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்காமல் இருப்பதையும்,

குறைதீர் கூட்டம் சரக வாரியாக மாதமாதம் தன்னால் நடத்திட இயலாது எனத் தெரிவிப்பதையும்,

இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் திருமதி.சோ.செல்லம்  அவர்களின் ஆசிரியர் விரோத போக்கையும்,

இந்த மாவட்டப் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது.

இந்த நிலையை மாற்றிட.....

வரும் பிப்ரவரி 23ந் தேதிக்குள் மதுரை கள்ளர் சீரமைப்பு அலுவலகத்தை TNPTF (KR) மாவட்ட கிளையின் மூலமாக முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும்,

அடுத்த கட்டமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வெளியிட்ட அரசாரணையை நடைமுறைப்படுத்தாத நிர்வாகத்தைக் கண்டித்து சென்னை தலைமைச் செயலகம் முன் கள்ளர் சீரமைப்பு ஆசிரியர்களை ஒன்றுதிரட்டி மாபெரும் மறியலில் இம்மாத இறுதிக்குள் நடத்துவது எனவும்,

 மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.